முள்ளியவளை பொன்னகர் கிராம மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு
முள்ளியவளை கிராமத்தில் குடிநீரற்று அவதியுற்ற மக்களுக்கு குடிநீரினை பெற்றுக்கொள்வதற்கான குழாய்க்கிணறு மீளமைக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட முள்ளியவளை மூன்றாம் வட்டாரம் பொன்னகர் கிராமத்தில் வீட்டுத்திட்டத்தில் வசித்துவரும் மக்கள் குடிநீர் இல்லாத நிலையில் 25 நாட்களுக்கு மேற்பட்டு அவதியுற்றிருந்த நிலையில் இன்று (12) மக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குழாய் கிணறு
இதனையடுத்து குறித்த கிராம மக்களால் முன்னாள் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் உறுப்பினர் இரத்தினம் ஜெகதீசனுக்கு தெரிவிக்கப்பட்டதனை தொடர்ந்து குழாய் கிணறு மீளமைக்கப்பட்டு அதற்கான மோட்டார் இயந்திரம் ஒன்றும் கிணற்றில் பொருத்தப்பட்டு மக்களின் பாவனைக்கு விடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் முள்ளியவளை வடக்கு கிராம சங்க அபிவிருத்தி தலைவர், சமூக சேவையாளர், பொன்னகர் கிராம சங்க அபிவிருத்தி தலைவர், செயலாளர், கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.