பொது மக்களின் பிரச்சினைகளுக்கு உடனுக்குடன் தீர்வு: கிழக்கு ஆளுநர் தெரிவிப்பு(Photos)
கிழக்கு மாகாணத்தில் மின்சாரம் இன்றி வசித்துவரும் 15 ஆயிரம் குடும்பங்களுக்கு மின்சாரம் வழங்குவதற்கான பொறிமுறைகளை சமர்ப்பிக்குமாறு இலங்கை மின்சாரசபையின் கிழக்கு மாகாண பிரதி பொது முகாமையாளருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பணிப்புரை விடுத்துள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (6) ஆளுநருக்கும் கிழக்கு மாகாண மின்சார சபை பிரதி பொதுமுகாமையானர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் இடையே இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.
முதலாம் இணைப்பு
கிழக்கு மக்களின் பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்றையதினம் (05.06.2023) தகவல் தொழில்நுட்ப அதிகாரிகளுடன் கலந்துரையாடும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
இக்கலந்துரையாடலில் கிழக்கு மாகாண ஆளுநர் குறைதீர்க்கும் மையத்தில் மக்களின் பிரச்சினைகளை உடனுக்கு உடன் சம்பந்தப்பட்ட அமைச்சின் கவனத்திற்கு கொண்டுவரப்படும்.
தொழில்நுட்ப அதிகாரிகள்
மேலும் தொழில்நுட்ப அதிகாரிகள் இணைக்கப்படுவதோடு, பொது மக்களின் பிரச்சினைகள் மற்றும் சமூகப் பிரச்சினைகளுக்கு உரிய அதிகாரிகள் தீர்வினை பெற்று கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கிழக்கு மாகாண மக்களின் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வுகள் கிடைக்க எவ்வாரான தகவல் பறிமாற்ற செயற்பாடுகளை மேற்கொள்வது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |



