பூநகரி பிரதேச சபை எடுத்த முன்மாதிரியான நடவடிக்கை
பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் நன்மை கருதி பூநகரி பிரதேச சபை எடுத்துள்ள முன்மாதிரியான செயற்பாடு பலரதும் பாராட்டை பெற்றுள்ளது.
குறைந்த கூலி
தற்போது காலபோக நெற்செய்கை மற்றும் மேட்டு நில பயிர்செய்கை என்பன ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் பயிற்செய்கைக்கு தேவையான நிலத்தினை உழுவதற்கு பூநகரி பிரதேச சபை தனது உழவு இயந்திரத்திரத்தை குறைந்த கூலியில் சேவையில் அமர்த்தியுள்ளது.
அதனடிப்படையில், ஒரு உழவுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 3,000 ரூபாயும், இரண்டு உழவுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 5,500 ரூபாயும் பூநகரி பிரதேச சபையால் அறவிடப்பட்டு விவசாயிகளின் வயல் நிலங்கள் உழப்பட்டு வருகின்றன.
இதனை அடிப்படையாகக் கொண்டு பூநகரியில் தனியாரும் உழவிற்கான கூலியாக 5,500 ரூபாய் முதல் 6,000 ரூபாய் வரையில் மாத்திரம் மக்களிடம் அறவிட்டு வருகின்றனர்.
இதனை விவசாயிகள் பலரும் வரவேற்றுள்ளனர்.
பொருளாதார நெருக்கடி
இந்நிலையில் வவுனியா போன்ற மாவட்டங்களில் ஏக்கருக்கு 15,000 ரூபாய் வரை உழவுக்கான கூலி அறவிடப்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், வவுனியாவில் உள்ள உள்ளுராட்சி மன்றங்கள், கமநல அபிவிருத்தி திணைக்களங்கள் என்பவற்றிடம் உழவு இயந்திரங்கள் இருந்தும் விவசாய மாவட்டமான வவுனியா விவசாயிகளின் நன்மை கருதி இவ்வாறான ஒரு செயற்பாட்டை முன்னெடுக்கவில்லை.
இதனால் பொருளாதார
நெருக்கடிக்கு மத்தியிலும் தனியார் தரப்பினர் விவசாயிகளிடம் அதிகளவான உழவு பணத்தை
அறவிடுகின்றனர் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.