திண்மக் கழிவுகளை முகாமைத்துவம் செய்யும் நிலையம் வலி வடக்கில் திறந்து வைப்பு
வலி வடக்கு பிரதேசசபை ஆளுகைக்குட்பட்ட பிரதேசத்தில் திண்மக்கழிவுகளைச் சேகரித்து முகாமைத்துவம் செய்யும் நோக்கில் கழிவுகளைச் சேகரிக்கும் நிலையம் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வானது நேற்று(20.03.2024) திறந்து வைக்கப்பட்டுள்ளது.
திறப்பு விழா
மல்லாகம் பொதுச்சந்தை வளாகத்தில் "பெறுமதி" எனும் பெயருடன் திண்மக்கழிவு சேகரிக்கும் நிலையத்தை யாழ்ப்பாண மாவட்ட பிராந்திய உள்ளூராட்சி ஆணையாளர் பொ.ஸ்ரீவர்ணனுடன் தெல்லிப்பளை சுகாதாரவைத்திய அதிகாரி பரா. நந்தகுமார் மற்றும் க. ராகுலன் ஆகியோர் இணைந்து திறந்து வைத்துள்ளனர்.
இதேவேளை பசுமை இயற்கை பசளை அறிமுக நிகழ்வும், உலக மண் தின வெற்றியாளர்களுக்கான பாராட்டுப் பத்திரமும் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் வாரநாட்களில் காலை 8.30 மணி முதல் மாலை 4.00 மணி வரையும், சனிக்கிழமைகளில் நண்பகல் 12.00 மணிவரையும் இந்நியையமூடாக சேவையாற்றுவதுடன் , பொதுமக்கள் கழிவுகளை குறித்த நிலையத்தில் வழங்கி பதிவு அட்டையை பெற்று நிறைக்கேற்ற கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ளமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.