தீவகத்தில் சூரிய ஒளி மற்றும் காற்றாலை மின்சார திட்டம்: நெடுந்தீவிலும் பூமி பூஜை
தீவகத்தில் முன்னெடுக்கப்படவுள்ள சூரிய ஒளி மின்சாரம் மற்றும் காற்றாலை மின்சாரம் உற்பத்திக்கான வேலைத்திட்டத்தின் மற்றுமொரு முன்னேற்பாடாக நெடுந்தீவிலும் (Neduntheevu) பூமி பூஜை நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது இன்று (07.04.2024) நடைபெற்றுள்ளது.
தனியார் நிறுவனத்தின் நிதி
இலங்கை - இந்திய (India- Srilanka) அரசுகள் ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாட்டுக்கு அமைய இந்திய தனியார் நிறுவனத்தின் நிதி பங்களிப்புடன் முன்னெடுக்கப்படும் இந்த பாரிய மின்சார திட்டமானது கடந்தவாரம் அனலைதீவில் (Analaitivu) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் சூரிய ஒளி மின்சாரம் மற்றும் காற்றாலை மின்சாரம் உற்பத்திக்கான காற்றாலை அமையவுள்ள நெடுந்தீவில் இந்திய நிறுவன மின் பொறியியலாளர் தினேஷ் பாண்டியன் முன்னிலையில் "பூமி பூஜை" நிகழ்வு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |