கரைச்சியில் முறைப்படுத்தப்பட்ட மணல் விநியோகம் - தவிசாளர் வெளியிட்ட தகவல்
கரைச்சி பிரதேச சபையினரால் மாவட்டத்தில் நீண்டகாலமாக மேற்கொள்ளப்பட்டு வந்த முயற்சிகளின் பலனாக, மணல் விநியோகம் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதாக கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாச்சலம் வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார்.
மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு, மாவட்ட அரசாங்க அதிபர், கரைச்சி பிரதேச சபை மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களம் ஆகியவை இணைந்து மணல் விநியோகத்தை முறைப்படுத்தியுள்ளன.
எதிர் கொண்ட சவால்கள்: கடந்த 10-15 வருடங்களாக முறைசாராமல் இருந்த வியாபாரத்தை ஒழுங்குபடுத்தும்போது, தனிநபர்களின் அச்சுறுத்தல்கள் மற்றும் கொலை முயற்சிகள் உட்பட பல கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
மணல் வகைகள் மற்றும் விலைகள்
கழுவப்படாத மண்: களஞ்சியசாலையிலிருந்து ஏற்றி விடுவதற்கு 40,000 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட பகுதிகளில் 10,000 ரூபாயும், ஏனைய பிரிவுகளுக்கு அதற்கு ஏற்ற தொகையையும் டிப்பர் உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர்.

கிளிநொச்சிக்குள் 50,000 முதல் 55,000 ரூபாய்க்குள் பெற்றுக்கொள்ள முடியும்.
கழுவப்பட்ட மண்: 1,000இற்கும் மேற்பட்ட டிப்பர்கள் அளவிலான மண் தொடர்ச்சியாகக் கழுவப்பட்டு சேமிக்கப்பட்டு வருகிறது.
இதற்கான இறுதி விலை நிர்ணயம் இன்னும் செய்யப்படவில்லை; அரசு அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து, செலவுகளைக் கணித்து விரைவில் குறைந்தபட்ச விலை அறிவிக்கப்படும்.
தவறான விலை அறிவிப்பு
பொதுமக்கள் கிராம நிலாதாரி மற்றும் பிரதேச செயலாளரின் சிபாரிசுக் கடிதத்துடன் பிரதேச சபை அலுவலகத்தை அணுகி மணலை பெற முடியும்.

மேலும் இந்திய வீட்டுத் திட்டம், அரச மானிய வேலைகள், பாடசாலைகள் மற்றும் வைத்தியசாலைகள் போன்ற அபிவிருத்திப் பணிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று குறிப்பிட்டார்.
இதேவேளை இடைத்தரகர்களை நம்ப வேண்டாம் என்றும் சமூக வலைத்தளங்களில் வலம்வரும் உத்தியோகபூர்வமற்ற தகவல்களையும், தவறான விலை அறிவிப்புகளையும் நம்பி குழப்பமடைய வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார்.
அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழக்கும் மகிந்தவின் நெருங்கிய சகாக்கள் - மறைக்கப்படும் இரகசியங்கள்
ஹேமா ராஜ்குமார் முதல் குரேஷி வரை.. பிக் பாஸ் 10-ல் கலந்துகொள்ளும் 21 போட்டியாளர்களின் லிஸ்ட்.. Cineulagam