சந்திரனிலிருந்து எடுத்து வரப்பட்ட மண்! கொழும்பில் பார்வையிடலாம்..!
சந்திரனில் இருந்து எடுத்து வரப்பட்ட மண் மற்றும் பாறைகளின் மாதிரிகளை நேற்று (21) தொடக்கம் கொழும்பில் பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய சுவடிக்கூடத் திணைக்களத்தின் இயற்கை விஞ்ஞான நூதனசாலையில் அதற்கான பார்வைக் கூடம் திறக்கப்பட்டுள்ளது.
நீல் ஆம்ஸ்ட்ரோங்
1969ஆம் ஆண்டு ஜுலை 21ஆம் திகதி நிலவில் முதல் மனிதராக நீல் ஆம்ஸ்ட்ரோங் காலடியெடுத்து வைத்த போது எடுத்து வரப்பட்ட மண் மற்றும் பாறைகளின் மாதிரிகளே இவ்வாறு காட்சிப்படுத்தப்படவுள்ளன.
தேசிய நூதனசாலையில் மிக விரைவில் சந்திரன் மற்றும் நிலவுக்கான மனிதர்களின் பயணம் குறித்த விபரங்கள் உள்ளடங்கிய காட்சிக் கூடம் ஒன்றும் இன்னும் ஓரிரு மாதங்களில் நிர்மாணிக்கப்படவுள்ளது.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீக விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதியும் நவீன தொழில்நுட்பம் சார்ந்த ஆர்தர் சி கிளார்க் நிலையத்தின் தலைவருமான பேராசிரியர் சந்தன ஜயரத்ன மற்றும் தேசிய நூதனசாலையின் பணிப்பாளர் சனோஜா கஸ்தூரிஆரச்சி ஆகியோர் இணைந்து இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 நாட்கள் முன்

நா.முத்துக்குமார் குடும்பத்தினருக்கு திரையுலகினர் சார்பாக கொடுக்கப்பட்ட வீடு.. எவ்வளவு தெரியுமா? Cineulagam

இந்தியாவில் Audi A9 காரை வைத்துள்ள ஒரே பெண்! நீதா அம்பானியின் விலையுர்ந்த கார் கலெக்ஷன் இதோ News Lankasri
