கொழும்பில் போதைப்பொருளுடன் மென்பொருள் பொறியியலாளர் ஒருவர் கைது
இத்தாலியில் இருந்து இலங்கைக்கு கடத்தி வரப்பட்ட கஞ்சா உள்ளிட்ட பல வகையான போதைப்பொருட்களுடன் மென்பொருள் பொறியியலாளர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் குறித்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேல் மாகாண – தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இராணுவப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் சந்தேகநபருடன் நுகேகொடை விஜேராம சந்தியில் வைத்து 5 மில்லியன் ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இத்தாலியில் இருந்து இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது நடவடிக்கை
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மென்பொருள் பொறியியல் பட்டதாரி எனவும், அவர் வேலைக்காக அவுஸ்திரேலியாவிற்கு செல்லவிருந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.

ராகம பிரதேசத்தை சேர்ந்த 23 வயதான குறித்த நபர் இன்று (29) நுகேகொட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்காக மிரிஹான பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
மேலும், இத்தாலியில் இருந்து போதைப்பொருள் கடத்தும் வலைப்பின்னலின் முன்னனியானவர், கடவத்தை பிரதேசத்தை சேர்ந்தவர் என தகவல் வெளியாகியுள்ளதாகவும், அவரை கைது செய்வதற்கான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
குழந்தைக்காக சக்தி சொன்ன விஷயம், கதறி அழும் ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
இந்த வாரம் ஞாயற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று திரைப்படங்கள்.. பிளாக்பஸ்டர் மூவிஸ் Cineulagam