இலங்கை சமூக வலைத்தள பயனாளர்களுக்கு முக்கிய எச்சரிக்கை
பிரபல நிறுவனங்களின் வர்த்தக நாமங்கள் மற்றும் பல்வேறு இணைய முகவரிகளை பயன்படுத்தி 'இலவச பரிசுகளை வழங்குவதாக கூறி சமூக ஊடகங்கள் ஊடாக செய்திகளை பரிமாறிக்கொள்வது அதிகரித்து வருவதாக இலங்கை தகவல் தொழில்நுட்ப பிரிவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக 100க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தகவல் தொழில்நுட்ப பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போலிச் செய்திகள் மூலம் இணையத் தாக்குதல் செய்பவர்கள் எந்த நேரத்திலும் உங்களது முக்கியமான தனிப்பட்ட தகவல்களைப் பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாக தகவல் தொழில்நுட்ப பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இணையத் தாக்குதல் செய்பவர்கள் இதன் மூலம் உங்களின் சமூக ஊடக கணக்குகளை அபகரிக்க முடியும் என தகவல் தொழில்நுட்ப பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
அதன்படி, இதுபோன்ற செய்திகள் மற்றும் இணைப்புகளை கிளிக் செய்வதைத் தவிர்க்குமாறு இலங்கை தகவல் தொழில்நுட்ப பிரிவு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.





அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

பாகிஸ்தானை கடுமையாக தண்டிக்க தயாரான இந்தியா - கருணை காட்டுமாறு கெஞ்சவைக்க மோடி அரசு திட்டம் News Lankasri
