கொழும்பில் இதுவரையான காலப்பகுதியில் 27,500 பேர் கோவிட் - 19 தொற்றாளர்களாக அடையாளம்
கொழும்பில் கடந்த ஒக்டோபர் மாதத்தில் இருந்து இதுவரையான காலப்பகுதியில் 27ஆயிரத்து 500 பேர் கோவிட் - 19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
இதனையடுத்து கம்பஹா மாவட்டத்தை அடுத்து அதிக கோவிட் - 19 கொரோனாத் தொற்றாளிகள் கண்டறியப்பட்ட மாவட்டமாக கொழும்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் கொழும்பில் 280 பேர் கோவிட் - 19 தொற்றுடன் கண்டறியப்பட்டுள்ளனர். கம்பஹாவில் 128 பேர் கோவிட் - 19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் ,கம்பஹாவில் கடந்த ஒக்டோபர் 14 ஆயிரத்து 993 பேர் கோவிட் - 19 னால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஒக்டோபரில் இருந்து களுத்துறையில் 5711 பேரும் ,கண்டியில் 2328 பேரும், குருநாகலில் 1999பேரும் ,காலியில் 1739 பேரும், இரத்தினபுரியில் 1241 பேரும் ,அம்பாறையில் 1112 பேரும்,மாத்தறையில் மற்றும் கேகாலையில் 1059 பேரும் கோவிட் - 19 தொற்றாளிகளாக கண்டறியப்பட்டுள்ளனர்.





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 8 மணி நேரம் முன்

இளவரசர் ஜார்ஜ் இனி தன் குடும்பத்துடன் சேர்ந்து பறக்கமுடியாது: வித்தியாசமான ராஜ குடும்ப விதி News Lankasri
