பனிப்பொழிவு குறித்து பிரித்தானியாவில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
பனிப்பொழிவு குறித்து பிரித்தானியாவில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பிரித்தானியா, வேல்ஸ், வெஸ்ட் மிட்லாண்ட்ஸ், யார்க்ஷயர் மற்றும் ஹம்பர் ஆகியவற்றின் வடகிழக்கு மற்றும் வடமேற்கு பகுதிகளை உள்ளடக்கிய ஒரு மஞ்சள் எச்சரிக்கையை வானிலை அலுவலகம் வெளியிட்டுள்ளது.
மேலும், பனிப்பொழிவு காரணமாக நாடும் முழுவதும் நடைபெறவிருந்த கால்பந்தாட்டப் போட்டிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த வார இறுதியில் பிரித்தானியா மற்றும் வேல்ஸின் பகுதிகள் பனி மற்றும் பனிப்பொழிவு காலநிலையை எதிர்கொள்கின்றன.
சனிக்கிழமையன்று 5cm (2ins) வரை பனி உயர்ந்த தரையில் 2cm (0.8ins) வரை குறைந்த மட்டத்தில் பெய்யக்கூடும் என்று வானிலை அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
⚠️ Yellow Weather Warning issued ⚠️
— Met Office (@metoffice) January 2, 2021
Snow & ice for parts of northern England and eastern Scotland
Saturday 1800 – Sunday 1100
Latest info ? https://t.co/QwDLMfRBfs
Stay #WeatherAware pic.twitter.com/VVX1P89lst
பனி பெய்யும் இடத்தில், வழுக்கும் நடைபாதைகள் மற்றும் அவதானமாக வாகனங்களை செலுத்தும் நிலைமைகளை எதிர்பார்க்கலாம்" என்று வானிலை அலுவலகம் தெரிவித்துள்ளது.
சாலைகள் மற்றும் இரயில்வேக்கள் பாதிக்கப்படக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி முதல் வாரத்தில் பிரித்தானியா கடுமையான உறைபனி மற்றும் கடுமையான பனிப்பொழிவு சூழ்நிலைகளால் பாதிக்க கூடும் என்று முன்னறிவிப்பாளர்கள் ஏற்கனவே கணித்துள்ளனர்.
திங்கள் முதல் புதன்கிழமை வரை, குறிப்பாக தெற்கில் குளிர் இருக்கும் என்று வானிலை அலுவலகம் கணித்துள்ளது.
இந்த குளிர்காலத்தில் பிரித்தானியாவின் சில பகுதிகள் ஏற்கனவே கடுமையான நிலைமைகளை அனுபவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.