இலங்கையில் சுமூகமான ஆட்சி மாற்றம் அவசியம்:ஐ.நா செயலாளர் நாயகம்
இலங்கையில் ஆட்சி அதிகாரத்தை சுமூகமாக மாற்றுவது மற்றும் நாட்டின் ஆழமான பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை காண வலுவான அரசியல் கலந்துரையாடல்கள் அவசியம் என ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டனியோ குட்ரேஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
அனைத்து விதமான வன்முறைகளையும் கண்டிக்கிறேன்

அத்துடன் அனைத்து விதமான வன்முறை செயல்களை கண்டிப்பதுடன் அமைதியை முன்னெடுத்துச் செல்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதாகவும் அனைத்து தரப்பினரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என கோரிக்கை விடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பு, இலங்கைக்கும் இலங்கை மக்களுக்கும் உதவ தயாராக இருக்கின்றது எனவும் குட்ரேஸ் தெரிவித்துள்ளார்.
அரசியல் நெருக்கடியை உடனடியாக முடிவுக்கு கொண்டு வருவது அவசியம்

இதனிடையே ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதியும் இலங்கை மனிதாபிமானம் சம்பந்தமான உயர் அதிகாரியுமான ஹனா சிங்கர், சுதந்திரத்திற்கு பின்னர் இலங்கையில் ஏற்பட்டுள்ள மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்க்கொள்ளக் கூடிய வகையிலான கலந்துரையாடல்கள் மூலம் உடனடியாக அரசியல் நெருக்கடியை முடிவுக்கு கொண்டு வருவது அவசியம் எனக் கூறியுள்ளார்.
நெருக்கடியில் உதவாத ஐரோப்பிய நாடுகள்... உக்ரைன் தொடர்பில் அதிர்ச்சி முடிவெடுத்த ட்ரம்ப் News Lankasri
குணசேகரன் அடுத்த திட்டம், மதிவதனியை பார்க்க வந்த ராணா... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
சந்தோஷ செய்தி சொன்ன மீனா, ஆத்திரத்தில் விஜயா செய்த மோசமான காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
உடம்பு முடியாமல் இருப்பவரை பார்த்து கிண்டல் செய்த பாண்டியன், கோபத்தில் கோமதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam