மன்னாரில் இடம்பெற்ற ஸ்மார்ட் நடமாடும் சேவை
மன்னாரில் ஸ்மார்ட் (SMART) எதிர்காலம் நடமாடும் சேவை ஜனாதிபதியின் வழிகாட்டலில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார (Manusha Nanayakkara) தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வானது, நேற்று முதல் நாள் (20) மன்னார் நகரசபை மைதானத்தில் ஆரம்பமாகிய நிலையில் 2ஆம் நாள் நிகழ்வுகள் நேற்று (21.04.2024) காலை முதல் மாலை வரை இடம் பெற்றுள்ளது.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் ஏற்பாட்டில் 2 ஆம் நாள் நடமாடும் சேவை இடம்பெற்றது.
இதன்போது, 36 வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளதுடன் பின்தங்கிய மாணவர்களுக்கு உள்நாட்டு தொழில் முறைமையிலான வேலை வாய்ப்புகளும் வழங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தொழில் வாய்ப்புக்கள்
இதன்போது, தொழில்களை பதிவு செய்தல் மற்றும் உள்நாட்டு வெளிநாட்டு தொழில் வாய்ப்புகளை பெறுதல் போன்ற செயற்பாடுகள் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
குறித்த நடமாடும் சேவையில் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் உள்ளடங்களாக திணைக்கள தலைவர்கள், பிரதேச செயலாளர்கள் பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர் யுவதிகள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும், வெளிநாடுகளுக்கு சென்று சட்ட ரீதியாக தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள எத்தனித்துள்ள நூற்றுக்கணக்கான இளைஞர் - யுவதிகள் குறித்த நடமாடும் சேவையில் கலந்து கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |