கிளிநொச்சி இரணைமடு குளத்தின் கீழ் சிறுபோக நெற்செய்கை
கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீர்பாசன குளமாக காணப்படுகின்ற இரணைமடு குளத்தின் கீழ் இவ்வாண்டு 15 ஆயிரத்து 690 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்வதற்கான இறுதி தீர்மானங்கள் எடுக்கப்பட்டு விவசாயிகள் நிலத்தை பண்படுத்துகின்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், 2024 ஆம் ஆண்டு சிறுபோக பயிர்செய்க்காக இரணைமடுக் குளத்து நீர் நேற்று முன்தினம் (15-04-2024)பகல் திறந்து வைக்கப்பட்டது.
வலது கரை வாய்க்கால் இன்று பகல் 10 மணிக்கு குளத்தின் அருகில் அமைந்துள்ள ஒற்றை கை பிள்ளையார் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து திறந்து விடப்பட்டுள்ளது.
விசேட பூஜை
கிளிநொச்சி கனகாம்பிகை அம்பாள் ஆலயத்தில் அபிஷேக ஆராதனைகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து இடது கரை வாய்க்காலுக்கான குளத்தின் நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இந் நிகழ்வில் மாவட்ட அரச அதிபர் (பதில் ) சு.முரளீதரன் வட மாகான நீர்ப்பாசனப் பொறியியலாளர் ந. சுதாகரன் மாவட்ட நீர்ப்பாசன திணைக்கள த்தின் பொறியியலாளர்கள் மற்றும் மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக் களத்தின் பிரதி ஆணையாளர் பா. தேவரதன் மற்றும் விவசாயிகள் பதவி நிலை உத்தியோகத்தர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan
