இலங்கையில் உள்ள ஆடைத் தொழிற்சாலைகளில் சிறிய கோவிட் வைரஸ் கொத்தணிகள்
இலங்கையில் உள்ள ஆடைத் தொழிற்சாலைகளில் சிறிய கோவிட் வைரஸ் கொத்தணி தொற்றுக்கள் உருவாகத் தொடங்கியுள்ளதாகச் சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
பொதுச் சுகாதார ஆய்வாளர்கள் சங்க செயலாளர் எம்.பாலசூரியா இதனைத் தெரிவித்துள்ளார்.
கட்டுநாயக்க, கொக்கல மற்றும் துல்ஹிரிய சுதந்திர வர்த்தக வலயங்களில் உள்ள தொழிற்சாலைகளிலேயே இந்த தொற்றுக்கள் பதிவாகியுள்ளன.
வத்துபிட்டிவல , நோர்வூட், பல்லேகேல ஆகிய இடங்களில் உள்ள தொழிற்சாலைகளிலும் இந்த பாதிப்புக்கள் பதிவாகியுள்ளன.
நிட்டம்புவ- வத்துபிட்டிவலயில் ல் உள்ள ஒரு ஆடைத் தொழிற்சாலையின் முப்பது பணியாளர்கள் மத்தியில் தொற்று கண்டறியப்பட்டுள்ளது, மேலும் 80 பேர் தனிமைப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஹட்டனில் உள்ள நோர்வூட்டில் உள்ள ஒரு ஆடைத் தொழிற்சாலையின் பதினாறு ஊழியர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் இதனை அடுத்து அவர்களது நெருங்கியவர்கள் 50 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், துல்ஹிரிய சுதந்திர வர்த்தக வலயத்தில் ஒரு தொழிற்சாலையின் 400 ஊழியர்கள் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கண்டி, பல்லேகலையில் இதே நிர்வாகத்தின் கீழ் உள்ள மற்றொரு தொழிற்சாலையில் , 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கோவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
இதற்கிடையில், கட்டுநாயக்கவில் உள்ள சுமார் 50 தொழிற்சாலைகள் தற்போது பாதிக்கப்பட்டுள்ளதாகச் சுதந்திர வர்த்தக மற்றும் பொதுச் சேவைகள் ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
கட்டுநாயக்க எஃப்.டி.இசட் நிறுவனத்தில் பணிபுரியும் மொத்தம் 300,000 ஊழியர்களில், சுமார் 50,000 ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
தொழிற்சாலைகள் மூடப்பட வேண்டும் என்று ஊழியர்கள் அழைப்பு விடுத்த போதிலும், அவசர மற்றும் நிலுவையில் உள்ள விற்பனை காரணமாக உரிமையாளர்கள் அதற்கு இணங்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொக்கல சுதந்திர வர்த்தக வலயத்தில் பாதிக்கப்பட்ட ஒரு தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. பி.சி.ஆருடன் ஒப்பிடுகையில் என்டிஜன் சோதனை குறைந்த செலவு காரணமாக சில தொழிற்சாலை நிர்வாகங்கள் அதனை மேற்கொள்ளுகின்றன.
எனினும் அவை பி.சி.ஆர் சோதனைகள் போல துல்லியமானவை அல்ல என்றும் பாதிக்கப்பட்ட
ஊழியர்களைக் கண்டறிவதில் பயன் தராது. அத்துடன் தொழிற்சாலைகளிடையே வைரஸ் மேலும்
பரவுவதற்கான அபாயத்தை அது ஏற்படுத்துவதாகவும் பொதுச் சுகாதார ஆய்வாளர் சங்கச்
செயலாளர் எம்.பாலசூரிய தெரிவித்துள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri
