நான்கு நாட்களில் இலங்கை போக்குவரத்து சபை ஈட்டியுள்ள பெருந்தொகை வருமானம்
கடந்த 4 நாட்களுக்குள் 600 மில்லியன் ரூபாய் வருமானமாகக் கிடைத்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.
பண்டிகைக் காலத்தில் கூடுதலாக அதிகளவிலான பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலதிக பேருந்து சேவை
இதன்படி, ஒரு நாளைக்கு இலங்கை போக்குவரத்து சபைக்கு 200 மில்லியன் ரூபா வருமானம் வரை கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பண்டிகைக் காலத்தில் மிக அதிகளவிலான மக்கள் தங்களது கிராமங்களை நோக்கிச் செல்வதால் அதிக பேருந்துகளை கடமையில் ஈடுபடுத்த வேண்டிய நிலை இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுமக்களின் வசதிக்காக சுமார் 350 கூடுதல் பேருந்துகளை இயக்க இலங்கை போக்குவரத்து சபை நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இதன் மூலம் இந்த வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் போக்குவரத்து சபை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.