இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபன தலைவர் பதவி விலகினார்
இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபன தலைவர் செனேஷ் திசாநாயக்க பண்டார பதவி விலகியுள்ளார்.
அநுர குமார திசாநாயக்க(Anura Kumara Dissanayake) ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட பின், கடந்த செப்டம்பர் 25ம் திகதி அப்போதைய ஊடகத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தினால் , ரூபவாஹினிக் கூட்டுத்தாபன தலைவராக செனேஷ் பண்டார நியமிக்கப்பட்டிருந்தார்.
பதவி விலகல்
இந்நிலையில், ராஜபக்ஷ குடும்பத்தினர் உகண்டாவில் பணத்தைப் பதுக்கி வைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டஹச்சி தெரிவித்த கூற்றை நாடகக் கலைஞர் ஒருவர் கிண்டலடித்த சம்பவம் தொடர்பில் இரண்டொரு நாட்களுக்கு முன்னர் ரூபவாஹினி செய்திகளில் ஒளிபரப்புச் செய்யப்பட்டது.

இதனையடுத்து, செனேஷ் திசாநாயக்க பண்டாரவுக்கு பதவி விலகுமாறு கொடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாக அவர் தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.
பதவி விலகியுள்ள செனேஷ் பண்டார, ஶ்ரீஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறையின் சிரேஷ்ட பேராசிரியராக கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இன்று இரவு., கார்க் தீவு, எண்ணெய் வளங்களை கைப்பற்றுவோம்- ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
FIFA உலகக் கிண்ணம்... குழுச் சுற்றில் கட்டாயம் பார்க்க வேண்டிய ஐந்து முக்கிய ஆட்டங்கள் News Lankasri
90 வயதை தொடவிருக்கும் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி.. தள்ளாடும் வயதிலும் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறார் தெரியுமா? இதோ அந்த ரகசியம் Cineulagam