தேர்தலில் பசிலின் தலைமையில் மொட்டு வெற்றிவாகை சூடும்: சனத் நிஷாந்த நம்பிக்கை
தேர்தல் மார்ச் 9ஆம் திகதி நிச்சயம் நடக்கும் என எல்லோரையும் வழிநடத்தி செல்பவர் பசில் ராஜபக்ச, எனவே இந்த தேர்தலில் பசிலின் தலைமையில் மொட்டு கட்சி வெற்றியடையும் என இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.
சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் கருத்துரைக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கூறுகையில், அமைச்சர்களின் எண்ணிக்கையை குறைப்பதன் மூலம் நாட்டைக் கட்டிஎழுப்ப முடியாது.
நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டங்கள்
எல்லோரும் ஒன்றிணைந்து அர்ப்பணிப்புடன் செயற்பட்டால் மாத்திரம்தான் நாட்டைக் கட்டி எழுப்ப முடியும். உலக நாடுகளில் இப்படியொரு பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டிருந்தால் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து நாட்டைக் கட்டியெழுப்ப வேலை செய்யும். இங்கு அப்படி இல்லை.
கோவிட் தொற்று காலத்தில் நாம் சர்வட்சி கூட்டத்தை கூட்டியபோது அதிகமான எதிர்க்கட்சிகள் வரவில்லை. எதிர்க்கட்சியில் இருந்து ரணில் விக்ரமசிங்க மாத்திரமே கலந்து கொண்டார்.
அரசியல் ரீதியாக நாம் வெவ்வேறு நிலைப்பாட்டைக் கொண்டிருந்தாலும், அவர் அதையெல்லாம் மறந்து மக்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்காகப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்காக முன்வந்துள்ளார்.
அப்படித்தான் எல்லா எதிர்க்கட்சிகளும் இருக்க வேண்டும் என நாம் விரும்புகின்றோம்.
உள்ளூராட்சி சபைத் தேர்தல்
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியிலிருந்து விலகிய நிலையில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் இடம்பெறுகின்றது. மார்ச் 9ஆம் திகதியில் தேர்தல் நடக்கும் என்று நம்புகின்றோம்.
கட்சி என்ற அடிப்படையில் நாம் தேர்தலை எதிர்கொள்ளத் தயார். சஜித் பிரேமதாச சர்வதேச நாணய நிதியத்தை மிரட்டுகின்றார். அந்த நிதியத்துக்கு தாம் கட்டுப்படமாட்டோம் என்கின்றார்.
ஒரு பெரிய நிறுவனத்துக்கு எதிராக அவரால் அப்படிச் செய்ய முடியுமா என கேள்வி எழுப்பியுள்ளார்.

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
