கோட்டாபயவிற்கு ஏற்பட்ட நிலையை ரணிலுக்கு ஏற்பட விடமாட்டோம்: மஹிந்தானந்த அழுத்கமகே சபதம்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஏற்பட்ட நிலைமை தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஏற்பட இடமளிக்கப்படாது என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அழுத்கமகே தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவிற்கு, கோட்டாபயவிற்கு ஏற்பட்ட நிலை ஏற்படுவதை தடுக்க ஸ்ரீலங்கா பொது ஜன முன்னணி நடவடிக்கை எடுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் சவால்களை ஏற்றுக் கொள்ளுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்தார் எனவும் அந்த அழைப்பினை ஏற்றுக்கொள்ளும் தைரியம் சஜித்திற்கு இருக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், ரணில் விக்ரமசிங்க ஒருவரே இந்த சவாலை ஏற்றுக் கொள்வதற்கு துணிந்து முன் வந்தார் எனவும் நெருக்கடியான தருணங்களில் அவர் நாட்டை வழிநடத்தியுள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.
நாட்டில் அனைத்து மக்களும் சுதந்திரமாக வாழக்கூடிய ஒரு பின்னணியை ரணில் உருவாக்கியுள்ளார் என தெரிவித்துள்ளார்.
நாட்டை அபிவிருத்தி செய்வதற்காக தேவையான ஒத்துழைப்பை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஜனாதிபதிக்கு வழங்கும் என தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஏற்பட்ட நிலைமை ரணில் விக்ரமசிங்கவிற்கு ஏற்பட ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி இடம் அளிக்காது என தெரிவித்துள்ளார்.
இது ஓர் அரசியல் பிரச்சினை கிடையாது எனவும் இது மக்களின் வாழ்க்கையுடன் தொடர்புடைய பிரச்சினை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் காலங்களில் அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் தற்பொழுது நாட்டு மக்களை கருத்திற்கொண்டு ரணிலுக்கு ஆதரவளிக்கப்படும் எனவும் மஹிந்தானந்த அலுத்கமகே மேலும் தெரிவித்துள்ளார்





பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
