கொலை மிரட்டல் விடுத்து வாக்குமூலம் பதிவு செய்யப்படுவதாக குற்றச்சாட்டு
கொலை மிரட்டல் விடுத்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
நபர்களிடம் கொலை மிரட்டல் விடுத்து வாக்குமூலம் பதிவு செய்வதனை அடக்குமுறை என்றே குறிப்பிட வேண்டும் எனவும் இது ஓர் அடக்குமுறை செயல்பாடு எனவும் கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழு வாக்குமூலம் பதிவு பெற்றுக் கொள்வது தொடர்பில் அவர் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்.

மேலும் லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவின் எதிரில் குழுமியுள்ள கூட்டம் தானாக சேர்ந்த கூட்டம் எனவும் இவர்களை திட்டமிட்டு அழைத்து வரவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கட்சியின் தலைவர்கள் சட்டத்தின் முன் நிற்பதற்கு ஒருபோதும் அஞ்சியவர்கள் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.
வங்கிக் கொள்ளைகளில் ஈடுபட்ட வரலாறு தமது தலைவர்களுக்கு கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.
எனவே எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் சட்டத்தின் முன் நிற்பதற்கு தமது தலைவர்கள் அஞ்சியது கிடையாது என தெரிவித்துள்ளார்.
மஹிந்த கைது செய்யப்படுவாரா நீண்ட நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்படுமா என்பது போன்ற காரணிகள் தொடர்பில் எதிர்வு கூறல்களை வெளியிட முடியாது எனவும் பொறுத்திருந்து பார்க்க வேண்டும் எனவும் சாகர காரியவசம் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
சனி வக்ர பெயர்ச்சி 2026: ஜூலை 27 முதல் இந்த ராசிகளின் வாழ்க்கையில் ஏற்படப்போகும் பாரிய மாற்றம்! Manithan
அவரது இரத்தத்திற்குப் பழிவாங்குவது உறுதி: தந்தையின் இறுதிச்சடங்கில் மொஜ்தபா கமேனி உருக்கம் News Lankasri