மொட்டு கட்சி ஒருவரின் மரணத்திலும் அரசியல் செய்யும் இழி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது
ஒருவரின் மரணத்தில் அரசியல் செய்வது மிக இழிவான செயல் என அமைச்சர் சுசில் ரணசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
ஸ்ரீலங்கா பொது ஜன முன்னணி ஒருவரின் மரணத்திலும் அரசியல் செய்வதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
மொட்டு கட்சியானது ஒருவர் உயிர் வாழும் போதும் உயிரிழந்த பின்னரும் அதனை வைத்து அரசியல் செய்ததாக அவர் சாடியுள்ளார்.

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பில் கருத்து வெளியிடும் போது இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒருவரின் மரணத்தில் ஒருபோதும் தமது கட்சி அரசியல் செய்யாது என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
ஒருவரின் மரணம் மிகவும் அதிர்ச்சிகரமான விடயம் எனவும் அதனை அவ்வாறான ஒரு கோணத்திலேயே தாம் பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மொட்டுக்கட்சி போன்று இழிவான அரசியலில் ஈடுபடுவதற்கு எவ்வித உத்தேசமும் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.
நிலா வீட்டைவிட்டு சென்றதால் சோழன் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கில் குடும்பத்தினர்... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam