மொட்டு கட்சியின் வேட்பாளர் குறித்து நாளை அறிவிப்பு
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது குறித்து நாளைய தினம் அறிவிக்கப்படும் என கட்சியின் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க வேண்டுமென தீர்மானிக்கப்பட்டால் அவருக்கு பூரண ஆதரவு வழங்கப்படும் என மகிந்த குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் கட்சியின் வேட்பாளர் யார் என்பது குறித்த இறுதி தீர்மானம் அறிவிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
மொட்டு கட்சி வேட்பாளர்
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் சில உறுப்பினர்கள் வேறும் வேட்பாளர்களுக்கு ஆதரவளிப்பதாக,அவர்களுக்கு தேவையான சுதந்திரத்தை வழங்கினால் எதிர்காலத்தில் அது பிரச்சினையாக உருவாகாது என மகிந்த குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மொட்டு கட்சி வேட்பாளர் ஒருவரையும் பெயரிடாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறெனினும் மொட்டு கட்சியின் ஆதரவு யாருக்கு என்பது குறித்து அநேகமாக நாளை அறிவிக்கப்பட உள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

சீனாவைப் புறக்கணிக்கும் இந்திய மின்னணு உற்பத்தியாளர்கள் - தாய்வான், தென்கொரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் News Lankasri

கடலுக்கு அடியில் மிகப்பெரிய ஜாக்பாட்டை கண்டுபிடித்த இந்தியாவின் நட்பு நாடு.., ஆனால் ஒரு சிக்கல் News Lankasri

திருமணமாகாமல் இரட்டை குழந்தைக்கு தாயான நடிகை பாவனா.. 40 வயதில் வந்த ஆசையாம்.. வைரலாகும் பதிவு! Manithan
