இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பில் திடீரென ஏற்பட்டுள்ள அதிகரிப்பு
இலங்கையில் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், ஐந்து மாதங்களின் பின்னர் வெளிநாட்டு கையிருப்பும் மற்றும் அந்திய செலவணி அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
2022ஆம் ஆண்டு மே மாத இறுதியில் இலங்கையின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பு அதிகரித்துள்ளது. மே மாத கையிருப்பு 1920 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.
வெளிநாட்டு கையிருப்பு அதிகரிப்பு
2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பதிவாகியிருந்த 1812 மில்லியன் அமெரிக்க டொலர்களிலிருந்து இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த ஐந்து மாதங்களின் பின்னர் உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பு அதிகரிப்பு ஏற்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அந்நிய செலாவணி அதிகரிப்பு
இதேவேளை, மே மாதத்தில் இலங்கையின் அந்நிய செலாவணியிலும் சிறிதளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்த காலப்பகுதியில் இலங்கையின் அந்நிய செலாவணி 1602 அமெரிக்க டொலரில் இருந்து 1805 அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam

வீட்டைவிட்டு வெளியே போன மீனா, விஜயாவிற்கு ஷாக் கொடுத்த முத்து.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
