உலகக் கிண்ணப் போட்டித் தொடரை வெற்றியுடன் ஆரம்பித்த இலங்கை
உலகக் கிண்ண ரி20 கிரிக்கெட் போட்டித் தொடரினை இலங்கை அணி வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது.
உலகக் கிண்ணப் போட்டித் தொடரில் இலங்கை அணி பங்கேற்ற முதல் போட்டி இன்றைய தினம் ஆர்.பிரேமதாச மைதனாத்தில் நடைபெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய அயர்லாந்து அணி இலங்கை அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.

இன்படி களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 163 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இந்தப் போட்டியில் குசால் மெண்டிஸ் ஆட்டமிழக்காது 53 ஓட்டங்களையும், கமிந்து மெண்டிஸ் 44 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
அயர்லாந்து அணி சார்பில் பெரி மெக்கார்த்தி மற்றும் ஜோர்ஜ் டொக்ரால் ஆகீயோர் தலா இரண்டு விக்கெட்களை வீழ்த்தினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி 19.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 143 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது.
இதில் ஹரி டெக்டர் 40 ஓட்டங்களைப் பெற்றுக்காண்டார்.
பந்து வீச்சில் மஹீஷ் தீக்ஷன மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோர் தலா மூன்று விக்கெட்களை வீழ்த்தினர்.
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
சிதைக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட இலக்குகள்: நிலைகுலைந்து நிற்கும் ஈரான்: அமெரிக்கா தகவல் News Lankasri
ரயில் நிலையத்தில் படுத்துறங்கிய லாரி ஓட்டுநர் மகன் - RCB அணியின் நம்பிக்கை நட்சத்திரம் News Lankasri