ஜெனிவா மாநாட்டில் இலங்கைக்கு பெரிய பாதிப்பில்லை! - நீதி அமைச்சர்
ஜெனிவா மாநாட்டில் இலங்கைக்கு களங்கம் ஏற்படாது என தாம் நம்புவதாக நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றிடம் பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஆரம்பத்தில் இருந்தே, குறித்த மாநாடு ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான இராணுவ நிலைமையை மையமாகக் கொண்டதுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், ஜெனிவா மாநாட்டில் இலங்கை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் எதிர்வரும் சனிக்கிழமை கலந்துரையாடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த புகார்களுக்கு எதிராக வெளிவிவகார அமைச்சர் உரிய பதிலளிப்பதற்கு தயார் எனவும் அமைச்சர் தெரிவித்தார். இருப்பினும், இந்த புகார்களின் தன்மையைப் பார்க்கும்போது, அவை எங்களை கடுமையாக பாதிக்காது, என்றார்.
ஜெனிவா மாநாட்டு அதிகாரிகள் இன்று இலங்கையில் மட்டுமன்றி உலகம் முழுவதிலும் உள்ள நிலைமையை உணர்ந்துள்ளனர். ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர்ச் சூழல் இன்று பெரிய தலைப்பாக மாறியிருப்பதே காரணம் என அவர் மேலும் கூறியுள்ளார்.





வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய பொருளாதாரத் தடை - இந்திய நிறுவனமும், இந்திய வம்சாவளி கேப்டனும் நேரடி பாதிப்பு News Lankasri
