இலங்கை - பங்களாதேஸ் போட்டி: பந்தயம் கட்டிய சகோதரர்கள் கைது
இலங்கை - பங்களாதேஸ் அணிகளுக்கு இடையில் கடந்த 20ஆம் திகதியன்று நடைபெற்ற ஆசியக்கிண்ண கிரிக்கட் போட்டியை மையப்படுத்தி இடம்பெற்றதாக கூறப்படும் பந்தயம் தொடர்பில் சகோதரர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய மகாராஸ்டிராவில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. மகாராஸ்டிராவின் பிம்ப்ரி சின்ச்வாட் நகரத்தில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டபோதே பொலிஸார் அவர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர்.
சோதனையின் போது, குறித்த சகோதரர்கள் இருவரும் இணையம் மூலம் பந்தயம் கட்டும் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் சூதாட்டம்
இந்தநிலையில், அவர்களிடம் இருந்து பல தொழில்நுட்ப சாதனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்திய சூதாட்டத் தடுப்புச் சட்டத்தின் விதிகளின் கீழ் கிரிக்கெட் சூதாட்டம் ஒரு குற்றமாகும் என்று இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 23 மணி நேரம் முன்
குணசேகரன் போடும் மாஸ்டர் பிளான், ஜனனி சமாளிப்பாரா?... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
2025ஆம் ஆண்டு வசூல் சாதனை படைத்த காந்தாரா தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? Cineulagam