இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் ஜப்பானின் வலியுறுத்தல்
இலங்கைக்கான கடன் மறுசீரமைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பில், இலங்கைக்கும், இந்தியா, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் இணைந்து தலைமை தாங்கிய உத்தியோகபூர்வ கடன் குழுவிற்கும் (OCC) இடையில் எட்டப்பட்ட உடன்படிக்கையை ஜப்பான் வரவேற்றுள்ளது.
ஏப்ரல் 2023 இல் OCC ஐ அறிமுகப்படுத்தியதன் மூலம் இலங்கைக்கான கடன் மறுசீரமைப்பு செயல்முறையில் ஜப்பான் ஒரு முன்னணி பங்கைக் கொண்டுள்ளது.
எதிர்கால கடன் மறுசீரமைப்பு
இது பாரிஸ் மன்ற நாடுகளுக்கும் பாரிஸ் மன்றத்தில் அங்கம் இல்லாத நாடுகளுக்கும் இடையில் நடுத்தர வருமான நாடுகளுக்கான கடன் மறுசீரமைப்புக்கான முதல் கட்டமைப்பாகும்.
இந்த கட்டமைப்பின் கீழ் இலங்கையுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இறுதி செய்திருப்பது ஒரு முக்கிய சாதனை என்று ஜப்பானின் நிதி அமைச்சர் சுசுகி சுனிச்சி (Suzuki Shunichi) தெரிவித்துள்ளார்.
நடுத்தர வருமான நாடுகளுக்கான எதிர்கால கடன் மறுசீரமைப்பிற்கு இது ஒரு முன்னணி சந்தர்ப்பமாக இருக்கும் என்று தாம நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் OCCக்கு வெளியே உள்ள மற்ற உத்தியோகபூர்வ இருதரப்பு கடன் வழங்குநர்கள் மற்றும் தனியார் கடன் வழங்குநர்களுடன் வெளிப்படையான மற்றும் ஒப்பிடக்கூடிய வகையில் இலங்கை கடன் மறுசீரமைப்பை செயல்படுத்தும் என்று தாம் எதிர்பார்ப்பதாகவும் ஜப்பானின் நிதி அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இலங்கையின் நிலையான வளர்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு, ஜப்பான் தமது ஒத்துழைப்பைத் தொடரும் என்றும் ஜப்பானிய நிதி அமைச்சர் சுசுகி சுனிச்சி கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |