இலங்கை இந்தியாவின் பிராந்தியமா..! ஹரினின் கருத்துக்கு சுதந்திரக் கட்சி கண்டனம்
இலங்கையானது இந்தியாவின் பிராந்தியம் என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கருத்து வெளியிட்டிருந்தால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அதனை வன்மையாகக் கண்டிக்கின்றது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளரான துஷ்மந்த மித்ரபால தெரிவித்துள்ளார்.
ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
விரோதப் போக்கு
அவர் மேலும் தெரிவிக்கையில், “எந்த நோக்கில் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ அந்தக் கருத்தை வெளியிட்டார் என தெரியவில்லை. அது பற்றி நான் முழுமையாக ஆராயவில்லை. எனினும், இலங்கை என்பது இந்தியாவின் பிராந்தியம் கிடையாது.
அதேபோல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இந்திய விரோதப் போக்கைக் கடைப்பிடிக்கும் கட்சி அல்ல. பொருளாதாரம் சார்ந்த விடயங்களின் போது ஒத்துழைத்துச் செயற்படலாம் என குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு எதிராகத் தொடுத்துள்ள வழக்கை தயாசிறி ஜயசேகர நீக்கிக் கொண்டால் அவர் சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டணியில் இணையலாம் என்றும் அதற்குத் தடை இல்லை என்றும் துஷ்மந்த மித்ரபால குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |