மனித வளர்ச்சிக் குறியீட்டு நாடுகளில் முன்னேறியுள்ள இலங்கை
மனித அபிவிருத்தி சுட்டெண்ணின் அண்மைய வெளியீட்டின் படி, இலங்கை 0.782 புள்ளிகளைப் பெற்று 191 நாடுகளில் 73வது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.
ஐ.நா அபிவிருத்தித் திட்டம்
ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தினால் சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்த சுட்டெண் படி, கடந்த 2019ஆம் ஆண்டு மற்றும் 2020 ஆம் ஆண்டை காட்டிலும் 2021ஆம் ஆண்டில், இலங்கை தர வரிசையில் இரண்டு இடங்களால் முன்னேறியுள்ளது.
இந்த அறிக்கையின் படி, இலங்கை சீஷெல்ஸ்க்கு கீழேயும், பொஸ்னியாவுக்கு மேலேயும் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒன்பது இடங்களை தாண்டி முன்னேறியுள்ள இலங்கை
சுவிட்சர்லாந்து, நோர்வே மற்றும் ஐஸ்லாந்து ஆகிய நாடுகள், இந்த சுட்டெண் படி, முதல் மூன்று இடங்களில் உள்ளன.
தரவுகளின்படி கடந்த 2015ஆம் ஆண்டிலிருந்து, இலங்கை இதுவரை ஒன்பது இடங்கள் முன்னேறியுள்ளது.

பெண்களுக்கான சமத்துவம்
ஆயுட்காலம், கல்வி, வருமானம், பாலின சமத்துவம் என்பவற்றை அடிப்படையாக கொண்டு இந்த சுட்டெண் தயாரிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாலின சமத்துவமின்மை குறியீட்டில் 191 நாடுகளின் பட்டியலில் இலங்கை 91ஆவது இடத்தில் உள்ளது.
இதற்கு பெண்களுக்கான சமத்துவமின்மை காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளம குறிப்பிடத்தக்கது.
சீனாவில் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து... லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றம் News Lankasri
சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri
இந்த வார சண்டே எல்லா தொலைக்காட்சியிலும் விஜய் பட ஸ்பெஷல் தான்... என்னென்ன படங்கள் பாருங்க... Cineulagam