இலங்கையின் தொழிலாளர் அமைச்சர் சிங்கப்பூர் அமைச்சருடன் கலந்துரையாடல்!
இலங்கையின் தொழிலாளர் அமைச்சரும் பொருளாதார மேம்பாட்டு பிரதி அமைச்சருமான பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ, சிங்கப்பூரின் கலாச்சாரம், சமூகம் மற்றும் இளைஞர் மற்றும் மனிதவளத்துறை இணையமைச்சர் தினேஷ் வாசு டாஷ் மற்றும் தேசிய மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் ஆல்வின் டான் ஆகியோருடன் உயர்மட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.
ஆகஸ்ட் 11-13 ஆம் திகதிவரை சிங்கப்பூருக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள நிலையில் அவர் இந்த சந்திப்புகளை நடத்தியுள்ளார்.
இலங்கைப் பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக் குழு, கொழும்பு பங்குச் சந்தை மற்றும் சிங்கப்பூரில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம் ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்ட 'இலங்கை முதலீட்டாளர் மன்றத்தின்' ஒரு பகுதியாக இந்தக் கலந்துரையாடல்கள் நடைபெற்றன.
பேச்சுவார்த்தைகள்
அமைச்சர் வாசு டாஷுடனான பேச்சுவார்த்தைகள், இலங்கைத் தொழிலாளர்களை சிங்கப்பூரின் பொருளாதாரத் தேவைகளுடன் இணைக்க தொழிலாளர் பாதுகாப்பு, திறன் அங்கீகாரம் மற்றும் பயிற்சியை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தின.
பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ, விருந்தோம்பல், சுகாதாரப் பராமரிப்பு மற்றும் உற்பத்தி போன்ற துறைகளில் இலங்கை நாட்டினருக்கான வேலை வாய்ப்புகளை பல்வகைப்படுத்துவதை வலியுறுத்தினார்.
திறமையான இலங்கை தொழிலாளர்களை ஈர்ப்பதில் சிங்கப்பூரின் ஆர்வத்தை அமைச்சர் வாசு டாஷ் வெளிப்படுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் வேல்விமானம் திருவிழா





கூலி படத்தில் தரமான நடித்து அசத்திய சௌபின் இப்படத்திற்காக வாங்கிய சம்பளம்.. எத்தனை கோடி தெரியுமா? Cineulagam

உக்ரைனுக்கு நேட்டோ பாணியிலான பாதுகாப்பு: முன்மொழிவை ஒப்புக் கொண்ட புடின்! ஜெலென்ஸ்கி வரவேற்பு News Lankasri

ரஷ்யாவும் உக்ரைனும் சொந்தமாக்க மல்லுக்கட்டும் Donetsk... குவிந்து கிடக்கும் புதையல் என்ன? News Lankasri
