தடுப்பூசி ஏற்றுவதில் உலக அளவில் இலங்கை முதலிடம்!
நாளாந்த கொவிட் தடுப்பூசி ஏற்றலில் இலங்கை உலக அளவில் முதலிடத்தை வகிப்பதாக ourworldindata.org என்ற தகவல் இணைய தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
100 பேரில் எத்தனை பேருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டது என்பது குறித்த புள்ளிவிபரத் தகவல்களின் அடிப்படையில் இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரத்தில் 100 பேருக்கு 15 மாத்திரை தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளதாகவும் இது இஸ்ரேலை விடவும் அதிக எண்ணிக்கை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் பத்து மில்லியனுக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் முதல் மாத்திரையாக இலங்கையில் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையில் 30 வயதுக்கும் மேற்பட்ட 88 வீதமான மக்களுக்கு குறைந்தபட்சம் ஒரு மாத்திரை கொவிட் தடுப்பூசியேனும் ஏற்றப்பட்டுள்ளதாக குறித்த இணைய தளம் தகவல் வெளியிட்டுள்ளது.
30 வயதுக்கும் மேற்பட்ட சனத்தொகையில் 20 வீதமானவர்களுக்கு இரண்டாம் மாத்திரையும் வழங்கப்பட்டுள்ளது.
உலகின் மொத்த சனத்தொகையில் 28.5 வீதமானவர்களுக்கு முதல் மாத்திரை வழங்கப்பட்டுள்ளதாகவும் 14.7 வீதமானவர்கள் முழுமையாக தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், உலகின் குறைந்த வருமானம் ஈட்டும் நாடுகளில் 1.1 வீதமான மக்களுக்கு மட்டுமே தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக ourworldindata.org இணைய தளம் தெரிவித்துள்ளது.


புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
