தமிழ் இனப்படுகொலைக்கான ஆதாரங்களை வெளியிட மறுக்கும் இலங்கை அரசாங்கங்கள்...
தமிழ் மக்களைப் பொறுத்தவரை, இனப்படுகொலை அங்கீகாரம் என்பது முக்கியமான ஒன்றாகும். ஏனெனில் கறுப்பு ஜூலை இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலையின் முதல் நிகழ்வோ அல்லது கடைசி நிகழ்வோ அல்ல.
ஆயுத மோதலுக்கு முன்பே, 1956, 1958 மற்றும் 1977 ஆம் ஆண்டுகளில் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் இலங்கையில் இடம்பெற்றுள்ளன
மேலும் மே 2009 இல், ஆயுத மோதல் இனப்படுகொலை, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்கள் போன்ற இன்னும் விசாரிக்கப்படாத குற்றச்சாட்டுகளில் இலங்கை சர்வதேசத்தினால் உள்வாங்கப்பட்டுள்ளது.
காலப்போக்கில் மாற்றம் பெற்ற பல்வேறு ஆளும் கட்சிகளும் தலைவர்களும் இந்த பாரிய அட்டூழியங்களுக்கு பொறுப்பானவர்கள் என சர்வதேசத்தால் அடையாளமிடப்பட்ட, ஒரு குறிப்பிட்ட தனிநபர் அல்லது அரசியல் கட்சிகளும் பொறுப்புக்கூறலுக்கான அழுத்தங்களை எதிர்கொள்கின்றன.
சித்திரவதை, பாலியல் அத்துமீறல், கட்டாயமாக காணாமல் போகும் தொடர்ச்சியான குற்றம் மற்றும் தொடர்ச்சியான இராணுவமயமாக்கல் ஆகியவை வடகிழக்கில் உள்ள தமிழர்களுக்கு தொடர்ந்து கடுமையான தீங்கு விளைவித்து வருகின்றன.
வரலாற்று மற்றும் சமீபத்திய வெகுஜன அட்டூழியங்களுக்கு குற்றவியல் அல்லது அரசு பொறுப்புக்கூறலை உறுதி செய்வதில் ஏற்பட்டுள்ள சர்வதேச தோல்விகள், தமிழர்களுக்கு எதிரான அட்டூழிய குற்றங்களுக்கு இலங்கை அரசு மற்றும் இலங்கை குற்றவாளிகளின் தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கும் நிலையை வலுப்படுத்தியுள்ளன.
இந்நிலையில் இலங்கையின் தற்போதைய அரசாங்கமான தேசிய மக்கள் சக்தியும் இனப்படுகொலைக்கான பொறுப்புகூறலை சர்வதேசத்திடம் இருந்து புறக்கணிக்கும் போக்கை கொண்டுள்ளது.
ஈழத் தமிழர்கள் குறைந்தது இரண்டு இனப்படுகொலைகளைச் சந்தித்துள்ளனர்: 1983 கறுப்பு ஜூலை மற்றும் 2009 முள்ளிவாய்க்கால் படுகொலை. இந்த இனப்படுகொலை குற்றச்சாட்டுகள் கவனிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படுவது முக்கியம்.
இந்நிலையில் இனப்படுகொலைக்கான நீதியும், குறித்த குற்றத்தை பகிரங்கப்படுத்துவதற்கான ஆதாரங்கள் தொடர்பிலும். அதனை புறக்கணித்துவரும் இலங்கை அரசின் செயற்பாடுகள் தொடர்பிலும் விரிவாக ஆராய்கிறது கீழுள்ள காணொளி...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |