ஜூலை 12ஆம் திகதியை துக்க தினமாக பிரகடனப்படுத்த இலங்கை அரசாங்கம் தீர்மானம்
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் திடீர் மறைவுக்காக ஜூலை 12ஆம் திகதியை துக்க தினமாக பிரகடனப்படுத்த இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அன்றைய தினம் அனைத்து அரசு நிறுவனங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் ஏற்றி வைக்க அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.
பொது விடுமுறை

மேலும் இது பொது விடுமுறை தினமாக இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது என பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.

மேற்கு ஜப்பானில் உள்ள நாரா நகரில் பொதுக்கூட்டம் ஒன்றில் அவர் உரையாற்றிக் கொண்டிருந்த போது ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது கடந்த 8ஆம் திகதி துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் அன்றே உயிரிழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
| ஜனாதிபதி பதவியை ஏற்க ரணில் சூழ்ச்சி: மரிக்கார் குற்றச்சாட்டு |
பெர்லினில் மக்கள் கூட்டத்தின் மீது பாய்ந்த வாகனம்: சந்தேக நபரை சுட்டுக் கொன்ற பொலிஸார் News Lankasri