இலங்கைக்கு மிகவும் நுட்பமான முறையில் கடத்தப்பட்ட பெருந்தொகை தங்கம் பறிமுதல்!
இலங்கைக்கு மிகவும் நுட்பமான முறையில் கடத்தப்பட்ட பெருந்தொகையான தங்கத்தினை சுங்க பிரிவினர் பறிமுதல் செய்துள்ளனர்.
220 மில்லியன் ரூபா பெறுமதியான சுமார் 16 கிலோ தங்கம் இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
துபாய், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து கொண்டு வரப்பட்ட வாகன உதிரிபாகங்கள் மற்றும் கோப்பி தயாரிக்கும் இயந்திரம் என்ற போர்வையில் கொண்டுவரப்பட்ட தங்கம் இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து சுங்கப்பிரிவின் ஊடகப்பேச்சாளர் சுதத்த சில்வா (Sudatta Silva) கருத்து வெளியிடுகையில்,
“இந்த பொருட்களின் உட்புறத்தின் தொழில்நுட்பப் பகுதிகள் தங்கத்தால் செய்யப்பட்டவை எனவும் அவை அதனுடன் இணைக்கப்பட்டிருந்ததாகவும் கூறியுள்ளார். எவ்வாறாயினும், சுங்க அதிகாரிகள் இந்த கடத்தல் முயற்சியை தடுத்துள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுங்கப்பிரிவு கூறியுள்ளது.


இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
பாகிஸ்தானின் அணுசக்தி நிலையத்தை தாக்க இந்தியா-இஸ்ரேல் ரகசிய திட்டம்: CIA அதிகாரி வெளியிட்ட தகவல் News Lankasri
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam