ராஜபக்ச குடும்பத்தினர் வெளிநாடு செல்வது தொடர்பில் மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள முக்கிய வேண்டுகோள்
ராஜபக்ச குடும்பத்தினர் வீதியில் இனிமேல் இறங்க முடியாது என்று ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த நாட்டில் தனி ஒரு குடும்பமாக இருக்கும் திருடர்களைப் பாதுகாப்பதற்குப் பொலிஸாரும் இராணுவத்தினரும் துணை போகவேண்டாம் என்று கேட்டுக் கொள்ள விரும்புகின்றோம்.
ராஜபக்ச குடும்பத்தினர் நாட்டிலிருந்து தப்பிச் செல்வதற்கு இடமளிக்காத வகையில் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் முன்வைக்கின்றேன்.
ராஜபக்ச குடும்பத்தினர் வீதியில் இனிமேல் இறங்க முடியாது. அவர்கள் ஹோட்டல்களிலோ, வீடுகளிலோ, எங்கேனும் தனி அறைகளிலோ அல்லது நிலத்தின் கீழான பங்கர்களிலோ பதுங்கியிருக்க முடியுமே தவிர வெளியில் அவர்கள் தலைகாட்ட முடியாது.
அவர்கள் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றாலும் வெளிநாட்டுப் பொலிஸாரின்
உதவியோடு அல்லது வெளிநாட்டுத் தூதரகங்களின் உதவியோடு அவர்களை இலங்கைக்கு
அழைத்து வருவோம் என குறிப்பிட்டுள்ளார்.





பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam

Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam
