தொடரும் உக்ரைன் - ரஷ்ய போர்! - இலங்கைக்கு ஏற்பட்டுள்ள கடும் நெருக்கடி
உக்ரைனில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக ஏற்கனவே ஸ்திரமற்ற பொருளாதாரத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்று இலங்கை தயாராகி வருகிறது.
உக்ரைனில் ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கையானது இலங்கையின் சுற்றுலாத் துறையையும், தேயிலை ஏற்றுமதியையும் எண்ணெய் கொள்வனவையும் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அண்மைக் காலத்தில் ரஷ்யா மற்றும் உக்ரைனில் இருந்து இலங்கைக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக வெளிவிவகார செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக அந்த நாடுகளில் இருந்து வருபவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார். "இது எங்களுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்" என்று வெளியுறவு செயலாளர் நேற்று ஒரு மெய்நிகர் ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக இலங்கை தனது தேயிலையை விற்பனை செய்வதில் சிரமம் ஏற்படும் என்றும் கொலம்பகே குறிப்பிட்டுள்ளார். இலங்கை தேயிலை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ரஷ்யாவும் உக்ரைனும் முக்கியமானவை.
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் எண்ணெய் மற்றும் எரிவாயுக்களுக்கு அதிக விலை கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
உக்ரைனின் நிலைமையின் விளைவாக உலகளவில் எண்ணெய் விலை ஏற்கனவே உயர்ந்துள்ளது மற்றும் இறக்குமதிக்காக இலங்கைக்கு அதிக டொலர்கள் தேவைப்படுகின்றது. "நாம் மீண்டும் ஒரு சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்," என்று வெளியுறவு செயலாளர் தெரிவித்துள்ளார்.
உள்ளூர் பொருளாதாரத்தில் தாக்கம் ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம, ஐரோப்பிய ஒன்றியத்தினால் ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள தடைகள் மற்றும் ஏனைய பிரதான நாடுகளால் முன்மொழியப்பட்டுள்ள தடைகள், ரஷ்யாவுடனான இலங்கையின் வர்த்தக உறவுகளையும் பாதிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
ரஷ்யா மீது ஐரோப்பிய ஒன்றியம் அல்லது அமெரிக்கா விதிக்கும் எந்தவொரு தடைகளுக்கும் இலங்கை இணங்க நிர்ப்பந்திக்கப்படும் என போகொல்லாகம கொழும்பு ஆங்கில் ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா இலங்கையின் முக்கிய வர்த்தக பங்காளியாக இருப்பதால் அது இலங்கையின் பொருளாதாரத்தை பாதிக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

புன்னகை பூவே தொடரை தொடர்ந்து முடிவுக்கு வரும் இன்னொரு சன் டிவி சீரியல்... ரசிகர்கள் வருத்தம் Cineulagam
