புதிய கருத்து கணிப்புகளின் அடிப்படையில் ஐக்கிய மக்கள் சக்தி முன்னிலை: மரிக்கார்
புதிய கருத்து கணிப்புக்களின் அடிப்படையில் ஐக்கிய மக்கள் சக்தி முன்னிலை வகிப்பதாக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் மரிக்கார் தெரிவித்துள்ளார்.
அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியை விடவும் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி முன்னிலை வகிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
கொலன்னாவ பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி தேர்தலில் வெற்றியீட்டும்
இந்த கருத்து கணிப்பின் அடிப்படையில் ஐக்கிய மக்கள் சக்திக்கு 39 வீதமான ஆதரவும், தேசிய மக்கள் சக்திக்கு 20 வீதமான ஆதரவும் காணப்படுவதாகவும், 24 வீதமானவர்கள் தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
தற்பொழுது தீர்மானம் எடுக்க முடியாத நிலையில் இருக்கும் நபர்களும் வெற்றிபெறும் தரப்பிற்கே ஆதரவு வழங்குவார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனடிப்படையில் ஐக்கிய மக்கள் சக்தி தேர்தலில் வெற்றியீட்டும் என மரிக்கார் தெரிவித்துள்ளார்.