அரசாங்கத்தில் இணைய தயங்கும் ஐ.மக்கள் சக்தியின் பிரபலம்
அரசாங்கத்தில் இணைய உள்ளதாக என கடந்த காலங்களில் பேசப்பட்டு வந்த ஐக்கிய மக்கள் சக்தியின் பிரபல உறுப்பினர் ஒருவர் தற்போது அரசாங்கத்தில் இணைய தயங்கி வருவதாக கூறப்படுகிறது.
அரசாங்கத்தில் இணைய தயங்குவதற்கான காரணம்

ஐக்கிய மக்கள் சக்தியின் இந்த உறுப்பினர் நிதியமைச்சு பொறுப்பை தமக்கு வழங்குமாறு கோரியதாகவும் அது கிடைக்காது என்ற காரணத்தில் அவர் அரசாங்கத்தில் இணைய தங்குவதாக அரசியல் தரப்பு தகவல்கள் கூறுகின்றன.
அரசாங்கம் அவருக்கு கொள்ளை திட்டமிடல் அமைச்சு பதவியை வழங்க தீர்மானித்திருந்தது. எனினும் அவர் அதற்கு இணங்கவில்லை என தெரியவருகிறது.
இதனிடையே அரசாங்கத்தின் அமைச்சரவையின் ஏனைய அமைச்சர்கள் அடுத்த வாரம் நியமிக்கப்பட உள்ளனர்.
இடைக்கால வரவு செலவுத்திட்டம் சமர்பிக்கப்படும் வரை தாமதிக்கப்படும் அமைச்சர்களின் நியமனம்

இடைக்கால வரவு செலவுத்திட்டம் சமர்பிக்கப்பட்ட பின்னர், அமைச்சர்கள் நியமிக்கப்பட உள்ளனர். வரவு செலவுத்திட்ட விவாதத்தின் போது, திட்டம் தொடர்பில் விமர்சிக்கும் வாய்ப்பை தவிர்ப்பதற்காக அமைச்சரவைக்கான நியமனங்கள் தாமதப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதேவேளை அமைச்சர்களை நியமிக்கும் முன்னர் முதலில் ராஜாங்க அமைச்சர்களை நியமிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அரசாங்கத்தின் தகவல்கள் கூறுகின்றன.