சுயாதீனமாக செயற்படுவதாக கூறும் சிலர் ஜனாதிபதியை பாதுகாக்கின்றனர்:ஐ.மக்கள் சக்தி
ஆளும் கட்சியில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் சிலருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பாதுகாத்து, சர்வக் கட்சி அரசாங்கம் ஒன்றை அமைக்கும் தேவை இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார கொழும்பில் இன்று தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரின் செயலகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
பிரதி சபாநாயகர் பதவியில் இருந்து விலகி ரஞ்சித் சியம்பலாப்பிட்டி, ஆளும் கட்சியின் ஆதரவுடன் மீண்டும் அந்த பதவிக்கு தெரிவானமை இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்திக்கு அரசாங்கத்துடன் எந்த உடன்படிக்கைகளும் இல்லை. ஆளும் கட்சியினர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவுக்கு ஆதரவு வழங்க சம்மதித்த காரணத்தினால், நாங்கள் இம்தியாஸ் பாக்கீர் மாக்கரை பிரதி சபாநாயகர் பதவிக்கு பரிந்துரை செய்தோம்.
பிரதி சபாநாயகர் பதவிக்கு பொது வேட்பாளரை நிறுத்துவது என இதற்கு முன்னர் சுயாதீன அணியுடன் இணக்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருந்தோம்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் ஜீ.எல்.பீரிஸ், ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவை ஆதரிப்பதாக அறிவித்த பின்னர், வேறு வேட்பாளரை நிறுத்த ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்தது.
அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படுவதாக கூறிய தரப்பினரில் சிலர் மக்களுக்கு துரோகமிழைத்து செயற்பட்டு வருகின்றனர் எனவும் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
Bigg Boss 10: மக்களின் சுவாரசியத்திற்காக முனியம்மாவின் விபரீத செயல்... அச்சச்சோ இப்படி மாட்டிக்கிட்டாரே? Manithan
மனைவியுடன் சண்டையை தவிர்க்க 21 வது மாடியின் பால்கனியில் இருந்து இறங்கிய கணவன்: காத்திருந்த சோகம் News Lankasri
முன்பதிவிலேயே விஜய்யின் ஜனநாயகன் பட கலெக்ஷனை தோற்கடித்த ரஜினியின் ஜெயிலர் 2... மாஸ் கலெக்ஷன்.. Cineulagam