சஜித் தரப்பின் முக்கியஸ்தர்கள் அரசியலில் இருந்து ஒதுங்கத் தீர்மானம்
ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர்கள் பலரும் அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கத் தலைப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தகவல் வட்டாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச, கட்சி தொடர்பில் அண்மையில் எடுத்த சில தீர்மானங்கள் குறித்து கட்சியின் மூத்த தலைவர்கள் எவருடனும் ஆலோசிக்காது, தன்னிச்சையாக அந்த தீர்மானங்களை மேற்கொண்டுள்ளார்.
அதிருப்தி
அதன் காரணமாக கட்சியின் முக்கிய பொறுப்பில் இருக்கும் பலரும் அது குறித்து அதிருப்தியுற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.
அவ்வாறான அதிருப்தி காரணமாகவே அண்மையில் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், கட்சியின் தவிசாளர் பதவியில் இருந்து விலகினார். அதே போன்று மிக விரைவில் இரான் விக்கிரமரத்ன உள்ளிட்ட பலரும் கட்சியை விட்டு விலகும் தீர்மானத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆனால் இவர்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து வேறு கட்சிகளில் இணையும் நோக்கமெதனையும் கொண்டிருக்கவில்லை என்பதுடன், அரசியலில் இருந்தும் முற்றாக ஒதுங்கிக் கொள்ளத் தலைப்பட்டுள்ளதாகவும் மேலும் கூறப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பட்டலந்த இடிமுழக்கம் மழையைத் தராது 2 நாட்கள் முன்

விஜய்யுடன் சந்திப்பு.. கண்களில் கண்ணீர்! அஸ்வத் மாரிமுத்து டிராகன் பற்றி தளபதி என்ன சொன்னார் பாருங்க Cineulagam
