காலி முகத்திடல் போராட்டகாரர்களுடன் இணையத் தயாராகும் சஜித் தரப்பினர்
தேவை ஏற்பட்டால் காலி முகத்திடலில் நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்களுடன் இணைந்துகொள்வோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்னாண்டோ, மனுஷ நாணயக்கார, முஜிபுர் ரஹ்மான், காவிந்த ஜயவர்தன மற்றும் ஹெக்டர் அப்புஹார்மி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
கட்சி அரசியலை மறந்து போராட்டக்காரர்களுடன் இணைந்து கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம் என நாடாளுமன்ற உறுப்பினர் பெர்னாண்டோ சற்று முன்னர் தெரிவித்தார்.
"எதிர்ப்பாளர்களுக்கு நாங்கள் ஆதரவளிப்போம், குறிப்பாக அரசாங்கம் அவர்களின் உரிமைகளை நசுக்க முயற்சித்தால்," அவர்களுக்கு ஆதரவாக செயற்படுவோம் எனவும் அவர் மேலும் கூறினார்.
இதனிடையே, காலி முகத்திடலில் 5ஜி கோபுரம் ஏன் அமைக்கப்பட்டது என ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கேள்வி எழுப்பினர். மேலும், அரசின் செயல்களை கண்டு மனம் தளர வேண்டாம் என்றும் போராட்டக்காரர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.