ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் விவகாரம்: எழுந்துள்ள கண்டனம்
தேசியப் பட்டியல் ஊடாக தனக்கு நாடாளுமன்ற உறுப்புரிமை வழங்கப்படாத கோபத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் வேட்பாளர் ஒருவர் சஜித்தை(Sajith Premadasa) கடுமையாக திட்டியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்கு கடந்த நாடாளுமன்றத்தேர்தலில் கிடைக்கப் பெற்ற ஐந்து தேசியப் பட்டியில் நாடாளுமன்ற ஆசனங்களுக்கும் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளராக போட்டியிட்டுத் தோல்வியடைந்த மனோ கணேசன், தனக்கு தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றப் பதவி வழங்கப்பட வேண்டுமென்று கட்சிக்கு நெருக்கடி கொடுத்தார்.
தேசியப் பட்டியல் நியமனம்
அதன் காரணமாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்(Sri Lanka Muslim Congress) மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பனவும் ஒப்பந்தப் பிரகாரம் தங்களுக்கான தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவிகளைப் பெற்றுக் கொள்வதில் கடுமையான நிலைப்பாட்டை எடுத்திருந்தன.
இதன் காரணமாக ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலருக்கு தேசியப் பட்டியல் நியமனம் கிடைக்கவில்லை.
இந்நிலையில் கடந்த பொதுத்தேர்தலின் போது சஜித் பிரேமதாசவுக்கு கூடுதலான நிதி செலவிட்ட பிரபல அரிசி ஆலை உரிமையாளர் லங்கேஷ்வர மித்ரபால, தனக்கு தேசியப் பட்டியில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படாத காரணத்தினால் கடும் கோபம் கொண்டுள்ளார்.
சஜித் பிரேமதாசவின் நெருங்கிய சகாவான லக்ஷ்மன் பொன்சேகாவுக்கு தொலைபேசி மூலம் அர்ச்சனை நடத்திய அவர், தான் விரைவில் முக்கியமான தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் எச்சரித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |