ஐ.தே.கவுடன் இணைந்து செயற்பட ஐக்கிய மக்கள் சக்திக்கு அனுமதி
தமது கட்சி தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு கட்சியின் முகாமைத்துவக்குழு மற்றும் செயற்குழு என்பன அனுமதி வழங்கியுள்ளன என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது, "வரலாற்று முக்கியத்துவமிக்க இந்த முடிவை கட்சியின் மத்திய குழு இம்முறையே முதன்முறையாக எடுத்துள்ளது.
இரு கட்சிகளின் தலைவர்கள்
அதற்கமைய இரு தரப்புகளுக்கு சிறப்பான பயணத்தை மேற்கொள்ள முடியும்.
எம்மிடையே பிளவுகள் இல்லை. அதனால்தான் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அநீதி இழைக்கப்பட்டபோது அதற்கு எதிராக ஒன்றாக எழுந்து நின்றோம்.
ரணில் விக்ரமசிங்க என்பவர் எமது சிரேஷ்ட தலைவர். தலைமைத்துவம் தொடர்பில் இங்கு பிரச்சினை இல்லை.
இந்தப் பிரச்சினை சுமுகமாகத் தீர்க்கப்படும். இரு கட்சிகளின் தலைவர்கள் மற்றும் கட்சிகளின் ஆதரவாளர்கள் இதற்கு ஆதரவளிப்பார்கள்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

நாளை முதல்... ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பயணிக்கும் பிரித்தானியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி News Lankasri

இனி Talk Of The Town ஆகப்போகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்... காரணம் அவரின் என்ட்ரி தான், ஆனால்? Cineulagam

சீனா மீது திரும்பிய ட்ரம்பின் கோபம்... ஜி ஜின்பிங் உடனான சந்திப்பு ரத்தாகும் என மிரட்டல் News Lankasri
