ஜயகமு சிறிலங்கா திட்டத்தின் ஆறாவது நாள் நிகழ்வு பொலன்னறுவையில்
அனுராதபுரத்தில் ஆரம்பித்த "ஜயகமு ஸ்ரீலங்கா" திட்டத்தின் ஆறாவது நிகழ்வு எதிர்வரும் 16-17 திகதிகளில் பொலன்னறுவையில் நடைபெறவுள்ளது.
நவீன உலகை எதிர்கொள்ளவதற்கு ஆற்றல் மிக்க இளைஞர்களை உருவாக்கும் நோக்கில் 'ஜயகமு ஸ்ரீலங்கா' வேலைத்திட்டம் நாடுபூராகவும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
ஐந்தாவது வேலைத்திட்டம் கடந்த 9, 10 திகதிகளில் குருநாகல் வெஹர விளையாட்டு மைதானத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
என்னிலிருந்து ஆரம்பிப்போம்
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.
இதன் இரண்டாவது நாள் நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துகொண்டிருந்தார்.
"என்னிலிருந்து ஆரம்பிப்போம்' "ஜயகாமு ஸ்ரீலங்கா' "நேர்த்திமிக்க திறமையானவர்கள் " போன்ற திட்டங்கள் உன் நாட்டு மற்றும் வெளிநாட்டு வேலைகளை நாடிச் வந்த மக்கள் மாதத்தில் அதிக வரவேற்பைப் பெற்று இருந்தது.
குறித்த அங்குரார்ப்பண நிகழ்வின் சீடா நிறுவனத்தினால் தொழில்முறைப் பயிற்சி உள்ளவர்களுக்கும் மற்றும் இல்லாதவர்களுக்கு அவர்களது அறிவு மட்டத்தை பரிசோதித்து சான்றிதழ்கள் வழங்குவதற்கான பதியுக்களும் மேற்கொள்ளப்பட்டன.
இங்கு கருத்து தெரிவித்த அமைச்சர் மனுஷ நாணயக்கார, இச்சான்றிதலுக்கான நிதியை சர்வதேச தொழிலாளர் நிறுவனத்துடன் கலந்தாலோசித்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துடன் இணைந்து வழங்க தயாராக உள்ளோம்.
தொழில்முறைச் சான்றிதழ்கள் இருந்தால் நாட்டிலும் வெளிநாட்டிலும் தொழில் புரியலாம். இதற்கான உரிமத்தை நாங்கள் வழங்குகிறோம்.
வெடுக்குநாறியில் கைது செய்யப்பட்டவர்களுக்கு நீதி வேண்டும்: மனித உரிமை ஆணையகத்தை முற்றுகையிட்ட உறவுகள்
தொழில்துறையினருக்கு சான்றிதழ்
கட்டுமானத் தொழிலுக்கு நீங்கள் பணம் செலவிட தேவையில்லை. ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைவாக அரசாங்கம், சர்வதேச நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் என்பன அதற்கான செலவை ஏற்க தயாராக உள்ளன.
ஏனைய தொழில்துறையினருக்கு சான்றிதழ்களைப் பெறுவதற்கு நாங்கள் கட்டணம் செலுத்த ஏற்பாடு செய்கிறோம். இது ஒரு முயற்சி ஆகும்.
மேலும் நாடு திரும்பிய 12 தொழிலாளர்களுக்கு சுய தொழில் புரிய 50000 ரூபா உதவித் தொகை, அவ்வாறே தொழில்முனைவோராக இருக்கும் 09 பேருக்கு 50000 ரூபாய் உதவித்தொகை அங்கவீனமுற்றவர்களுக்கு 32 மூக்கு கண்ணாடிகள், மற்றும் ஒரு சக்கர நாற்காலி போன்றனவும் வழங்கப்படன நாட்டில் முறைசாரா தொழிற்துறையில் ஈடுபடும் அனைவரின் தொழிலுக்கும் கௌரவத்தை பெற்றுக் கொடுக்கும் "கரு சரு" திட்டத்தின் மூலம் தொழிற்பயிற்சி சான்றிதழ் வழங்கப்பட்டது .
இன்னும் வெளிநாடுகளில் தொழில் புரியும் குருநாகல் மாவட்டத்தை சேர்த்தவர்களின் குடும்பங்களுக்கு பல்வேறு நலன்புரிசேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டன.
'ஜயகமு ஸ்ரீலங்கா' திட்டத்தின் இரண்டாம் நாள் திறமைமிக்க இளைஞர்களை உருவாக்குவதற்காக இளைஙர் கழகம் ஸ்தாபிக்கப்பட்டது.
அத்துடன் ஜனாதிபதி செயலகத்துடன் இணைந்து பத்தாயிரம் இளைஞர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் அனுசரணையில் இலவச தொழிற்பயிற்சிகளை வழங்கும் வேலைத்திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டது.” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |