புதுக்குடியிருப்பில் ஆறு இளைஞர்கள் கைது
புதுக்குடியிருப்பு உடையார்கட்டு குரவில் பகுதியில் ஐஸ் போதை பொருளை பயன்படுத்த தயாராக இருந்த இளைஞர்கள் அறுவரை கைது செய்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று (27.08.2024) மாலை இடம்பெற்றுள்ளது.

மக்களுக்கான சேவைகளை இலகுவில் பெறக்கூடியவாறு நகரத் திட்டமிடல்கள் அமைய வேண்டும் : வடக்கு ஆளுநர் தெரிவிப்பு..!
மேலதிக விசாரணை
புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடையார்கட்டு குரவில் பகுதியிலுள்ள யாருமற்ற வீடொன்றில் சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றது.
இந்நிலையில், திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையினை மேற்கொண்ட புதுக்குடியிருப்பு பொலிஸ் குழுவினர் இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது குறித்த இளைஞர்களிடமிருந்து 7 தொலைபேசிகளும், பதினேழாயிரம் ரூபா பணம் என்பவற்றுடன் சிறு சிறு 7 பொதிகளில் 90மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் உடையார்கட்டு குரவில் பகுதியினை சேர்ந்த நால்வர் மற்றும் புதுக்குடியிருப்பு பகுதியினை சேர்ந்த இருவர் ஆகிய இளைஞர்கள் ஆவார்.
குறித்த இளைஞர்களிடம் மேற்கொள்ளப்பட்டுவரும் மேலதிக விசாரணைகளின் பின்னர் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam
