நீச்சல் தடாகத்தில் நீராடிக்கொண்டிருந்த ஆறு வயது சிறுமி நீரில் மூழ்கி பலி
மட்டக்களப்பு - வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பாசிக்குடா சுற்றுலா விடுதியின் நீச்சல் தடாகத்தில் நீராடிக்கொண்டிருந்த ஆறு வயது சிறுமியொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவமொன்று நேற்று இடம்பெற்றுள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கண்டி - அலவத்கொட பகுதியைச் சேர்ந்த குடும்பத்தினர் பாசிக்குடாவிலுள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்த நிலையில் நீச்சல் தடாகத்தில் நீராடிக்கொண்டிருக்கும் போது முஹம்மட் சியாம் பாத்திமா செய்னப் எனும் ஆறு வயதுடைய சிறுமியே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் திடீர் மரண விசாரணை அதிகாரி வி.ரமேஸ் ஆனந்த் விசாரணைகளை மேற்கொண்டதுடன், நீரில் மூழ்கியதால் மூச்சு திணறல் காரணமாக ஏற்பட்ட விபத்து மரணமென்று தீர்ப்பு வழங்கி மருத்துவ விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் சடலத்தினை ஒப்படைக்குமாறு தீர்ப்பளித்துள்ளார்.
வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் குளிரூட்டி பழுதடைந்த நிலைமை காரணமாக பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்வதற்காக சிறுமியின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.







அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 4 மணி நேரம் முன்

குணசேகரன் கேங்குக்கு விபூதி அடிக்கப்பட்டு கடத்தப்படுகிறாரா தர்ஷன், ஜனனி பிளான் என்ன.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri
