இத்தாலி தேர்தலில் போட்டியிடும் ஆறு இலங்கையர்கள்
இத்தாலி நகர சபைத் தேர்தல் போட்டியிட வரலாற்றில் முதல் முறையாக ஆறு இலங்கையர்களுக்குச் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
இத்தாலியின் மிலானோ மற்றும் நாபோலி நகரத் தேர்தல் தொகுதிகளில் போட்டியிட இவர்களுக்குச் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
இவர்களில் நான்கு இலங்கையர்கள், மிலானோ நகர சபைக்கு உட்பட்ட தேர்தல் தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். இரண்டு பேர் நாபோலி நகர சபைக்கு உட்பட்ட தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.
மிலானோ நகர சபையின் இலக்கம்7 தொகுதியில் தம்மிக்க சந்திரசேகர, இலக்கம் 5 தொகுதியில் ரோய் காங்கா, இலக்கம் 8 தொகுதியில் கிறிஸ்டோபர் தம்பகே, இலக்கம் 9 தொகுதியில் கிறிஸ்டீனா கித்மி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
ஏனைய இரண்டு இலங்கையர்களான ஏஞ்சலி அழககோன் மற்றும் ரவிந்திர ஆகியோர் நாபோலி நகர சபைத் தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.
இத்தாலி நகர சபைகளுக்கான தேர்தல் நாளையும் நாளை மறுதினமும் நடைபெறவுள்ளது. இலங்கையிலிருந்து இத்தாலிக்குத் தொழில் புரியச் சென்றிருந்த நிலையில், அந்நாட்டுக் குடியுரிமை பெற்றுக்கொண்டுள்ள இந்த இலங்கையர்களுக்கே அந்நாட்டு அரசியலில் ஈடுபடச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.