பொலிஸ் துறையில் அதிரடி மாற்றம்! ஒரே நேரத்தில் ஆறு பிரதி பொலிஸ் மா அதிபர்கள் இடமாற்றம்
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கு உட்பட்டு, ஆறு பிரதி பொலிஸ் மா அதிபர்கள் (DIG) உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, அரச புலனாய்வுச் சேவையின் பிரதி பொலிஸ் மா அதிபராகப் பணியாற்றிய H.K.R. பெர்னாண்டோ, பொலிஸ் விசேட பிரிவின் பொறுப்பதிகாரி பிரதி பொலிஸ் மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இடமாற்றங்கள்
அதேவேளை, பொலிஸ் நலன்புரிப் பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபராகப் பணியாற்றிய W.U. கினிகே, மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் தலைவராகப் பணியாற்றிய K.A.J. கொடிதுவக்கு, பொலிஸ் நலன்புரிப் பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும், கேகாலை பிரிவுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் ஓஷான் ஹேவாவிதாரண, யாழ்ப்பாணப் பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் G.H. மரப்பன, களுத்துறை பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபராகப் பணியாற்றிய W.J. பத்மினி, கேகாலை பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் மா அதிபர் (IGP) பிரியந்த வீரசூரியவினால் இந்த இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.