வவுனியாவில் கோவிட் தொற்றால் மேலும் அறுவர் மரணம்
வவுனியாவில் நேற்றையதினம் கோவிட் தொற்றால் ஆறு மரணங்கள் இடம்பெற்றுள்ளதாகச் சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
திடீர் சுகவீனமுற்ற நிலையில் வவுனியா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்தவர்கள் நேற்றையதினம் (02) மரணமடைந்தனர்.
இவர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது.
இதில் ஆண்டியாபுளியங்குளம், கந்தசாமி கோவில் வீதி, செட்டிகுளம் , தவசிகுளம் , வேப்பங்குளம் , றம்பைக்குளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 46,47,60,63,83,86 வயதுடைய ஆறுபேர் கோவிட் தொற்றால் மரணமடைந்துள்ளனர்.
இந்நிலையில் மரணித்த ஆறு பேருடைய உடல்களையும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தகனம் செய்யச் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
வவுனியா மாவட்டத்தில் கோவிட் தொற்றால் நாளாந்தம் மரணமும் அதிகரித்துச் செல்கின்றது. கடந்த ஒரு மாதத்தில் மாத்திரம் 50 பேர் கோவிட் தொற்றினால் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஸ்ருதி வீட்டு உணவால் அவதிப்படும் விஜயா, எலி தொல்லையில் மாட்டிக்கொண்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam
சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக போகும் புத்தம் புதிய சீரியல் பராசக்தி... படப்பிடிப்பு தள போட்டோக்கள் Cineulagam