அனோஜனுக்காக முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட நாடு முழுவதிலும் உள்ள ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகத் துறை சார்ந்தவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கையொப்பமிட்டுள்ள தொழில்முறை ஊடகவியலாளர் சங்கங்கள் மற்றும் ஊடக அமைப்புகளாகிய நாம், கல்முனை நற்பிட்டிமுனையைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளியான சிவராசா அனோஜன் என்ற இலங்கை பிரஜைக்கு சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்திகள் குறித்து நமது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக் கொள்கிறோம் என ஊடக அமைப்புக்கள் ஒன்றிணைந்து அறிக்கை வெள்ளிக்கிழமை (25.09.2026) விடுத்துள்ளது.
இலங்கை தொழில்முறை இணைய ஊடகவியலாளர்கள் சங்கத்தின் ஒழுங்கமைப்பாளர் ப்ரெடி கமகே கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஒழுங்கமைப்பாளர் எல்.தேவஅதிரன், யாழ்ப்பாணம் ஊடக மையத்தின் தலைவர் கே.செல்வகுமார் ஆகியோல் அதில் அதில் கையொப்பமிட்டு இவ்வறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
ஈரானுக்கு எதிராக அதிநவீன லேசர் தொழில்நுட்பம்: மாற்று திட்டத்தை கையில் எடுத்த அமெரிக்கா News Lankasri